பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கெட்டுவிடக் கூடாதே? என்ற அச்சம் இருக்கலாம் அல்லவா? அன்பின் வழி அச்சம் இருத்தல் நல்லது. அச்சத்தின் வழியிலும் அன்பு தோன்றலாம். ஆனால், இது சிறப்புடையதன்று. நம்பிகள் திருப்பாச்சிலாச்சிரமத்தில் அருளிய பதிகத்தில் அன்பும் அச்சமும் ஒருங்கிணைந்து நம்பியாரூரரை இயக்கியதை உணரமுடிகிறது. அன்பு தழுவிய - அன்பு நீங்காத அச்சம் நிறைநலம் சான்ற அன்புடை யாருக்கே கிடைக்கும்.

ஆரூரர் தம் வாழ்விற்குத் தாயைத் துணையாக நினைந்திலர்; தந்தையைத் துணையாக நினைந்திலர்; இறைவனை மட்டுமே நம்பியிருந்தார். இன்று பத்திமையில் இத்தகு உரமுடையோரைக் காண்பதரிது. பலரை நம்பி மோசம் போகும் காலம் இது. ஆரூரர் இறைவனை மட்டும் நம்பினார். இத்தகு ஒருமை நம்பிக்கையில் குறைவிலா உரிமைகள் வந்தமைதல் இயற்கை வழங்குதலும்கூட உரியலத்தில் வழங்கப்பெறாமல் காலந்தாழ்த்துவதில் பலன் இல்லை! இறைவன், மறுமையின்பங்களையே வழங்குவான் என்பது ஒரு கருத்து. ஆனால், ஆரூரர் இம்மையில் அருள் பெறுதலையே விரும்புகின்றார். ஆம் மறுமை நலனுக்குரிய ஆன்மா - நிறைநலம் பெறுதற்குரிய ஆன்மா - இன்ப அன்பினை அடையவேண்டிய ஆன்மா இப்பிறப்பில் வறுமையில் கழிந்து விடின் மறுமை ஏது? இம்மை இல்லையேல் மறுமையில்லை; இதுவே சைவமரபு.

சைவத் திருமுறைகள் வாழ்க்கை நலன்களை அளிக்கும் அருமறைகள். ஆரூரரின் திருப்பாச்சிலாச் சிரமப்பதிகம் விழுமிய சிறப்புடையது.

ஒருவர், மனம் மகிழத் தக்கவகையில் நடந்து கொண்டபோது மகிழ்வர், அள்ளி வழங்குவர். ஒரோவழி பழகுவோருக்கு மகிழ்வு தரத்தக்க நிலையில் நடக்க இயலாமல் சோர்வுபடும் பொழுது மகிழ்வைக்காட்டாமல்