பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இதிலிருந்து ஆரூரர், இறைவன் திருக்குறிப்பின் வழியிலேயே தமது வாழ்க்கையை நடத்தி வந்தார் என்பது தெளிவாகிறது.

திருப்புறம்பயத்திற்குச் செல்லும் ஆர்வம் ஆரூரர்க்கு மிக்கிருந்தது. ஏன், திருஇன்னம்பரீசன் அருளாமையை புறம்பயத்தில் பெறலாம் என்று நம்புகின்றார். புறம்பயத்தில் இரவு பகலின்றி, வானோர்கள் இறைவனை ஏத்திப் போற்றி வழிபடுகின்றனர். அங்கு வழிபடும் வானோர்க்கெல்லாம் உயர்வு கிடைக்கிறது என்ற நம்பிக்கை, திரும்புறம்பயத்தை நோக்கி ஆரூரரை அழைத்துச் செல்கிறது. இதனை,

'கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள்
ஏத்தி வானவர் தாந்தொழும்
பொங்கு மால்விடை ஏறி, செல்வப்
புறம்ப யந்தொழப் போதுமே!

(ஏழாந்திருமுறை - 351)


என்பதால் அறியலாம். அதனால் திருப்புயம்பயம் செல்லும் வழியிலேயே பதிகத்தை அருளிச் செய்கிறார்.

வழித்துணை

ஆரூரர் திருவெஞ்சமாக்கூடலை வணங்கி, உடன் சோழ நாட்டுக்கு எழுந்தருளுகின்றார். சோழநாட்டில் திருக்கற்குடிமலை, திருவாறை மேற்றளி, திருஇன்னம்பர், திருப்புறம்பயம் முதலிய திருத்தலங்களை முறையே வழிபாடு செய்துகொண்டு திருமுதுகுன்று நோக்கி யாத்திரை செய்கின்றார். ஆரூரர் வழிபட்ட திருத்தலங்களுக்கிடையில் உள்ள தூரம் ஆரூரரின் இளைமைப் பொலிவையும் விரைவுணர்வையும் உணர்த்துகின்றது.

திருமுதுகுன்று செல்லும் வழியில் கூடலையாற்றுார் உள்ளது. ஆருரர் திருக்கூடலையாற்றுாருக்குச் செல்ல