பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

241


திருக்கோயிலுக்குள் செல்கிறார். சேக்கிழார் திருக்கோயிலின் வாயிலையே புண்ணிய வாயில் என்கிறார். சிவ புண்ணியத்தை ஈட்டித்தரும் வாயில் என்பதால் புண்ணிய வாயில் என்கிறார்.

மேற்குத் திருவாயில்வழி உள்ளே நுழைந்த நம்பியாருரர் இறைவன் ஆடல்வல்லானாக எழுந்தருளியுள்ள திருமுன் பிற்கு அழைத்துச் செல்லும் திரு அணுக்கத் திருவாயிலைக் கடந்து சந்நிதிக்குச் செல்கிறார். ஒளியாகிய இறைவன் உலகு தொழ ஆடும் அரங்கினைக் கண்டு பேரன்பு நிறைந்த உணர்வு அலை மோத எம்பெருமானை அணுகிச் செல்கிறார். பேரன்பு அழுத்தும் படியென்று சிறப்பிக்கப் பெறும் திருக்களிற்றுப் படியை அடைகின்றார். மேவிய காதலான், பதிகம் பாட இயலவில்லை. மெய்ப்பாடுறுகிறார். நிலந்தோய வீழ்ந்து வணங்குகிறார். தில்லையில் கண்ட திருக்கோலம் முன்பு ஆரூரர் தம் நெஞ்சில் நிறைந்து நின்று ஒரு திருக்கோலத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது. அது எந்தத் திருக்கோலம்: பேரூரில் கண்ட திருக்கோலம் நினைவிற்கு வருகிறது. பேரூரில் கண்ட பெருமான் திருவுரு மீண்டும் கரந்து போகாமல் நெஞ்சில் நிறைந்து மன்னிக் கிடந்ததாம். அதனால் பேரூர்ப் பெருமானுக்கு நெஞ்சிற் கரவிலாதவர் என்று சேக்கிழார் பெயர் சூட்டி மகிழ்கிறார். பலர், கட்புலனுக்குத் தெரிவர்; பொறிகளுக்குத் தெரிவர்; பொறிகளுக்கு விருந்தாய் அமைவர். என்ன பயன்: நெஞ்சிற்கரவாது ஒழுகினால்தான்் அன்பு சிறக்கும். ஆருயிர்த் துணையாய் அமைய முடியும். பேரூரில் எழுந்தருளியுள்ள பெருமான் நெஞ்சிற் கரவிலாதவர். ஆரூரர் நெடுந்துரம் வந்த பிறகும் அவர் நெஞ்சிலிருந்து இவர் நீங்கவில்லை.

தில்லைத் திருக்கூத்தைக் கண்டவுடன் ஆரூரர்க்குப் பேரூர்க் காட்சியே தென்படுகிறது. ஆம்! நம்முடைய வாழ்க்கையிலும் பேரூர்க் காட்சி பெருங்காட்சியே! இன்றும் நெஞ்சிற் கரவிலாத ஒரு மாமனிதர் பேரூரில் நடமாடு