பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கின்றார். எளிய தோற்றம்! நிறைந்த அன்பு! மக்கள் பால் ஈடுபாடு கொண்ட தோழமைக்கு உற்றதுணை ! நமது நெஞ்சில் கரவிலாதிருக்கும் ஒரு தோழமை! தமிழுக்குக் கல்லூரி! வளரும் சமுதாயத்திற்குக் கல்வி நிலையங்கள் கண்ட அருளாளர்! பேரூர் அடிகள் நெடுந்தூரம் கடந்த பிறகும் நினைவு கூரத் தக்கவர்.

தில்லைத் திருக்கோயில் இறைவன் நன்னெறிக்கண் நின்றாரை வாழ்விப்பான். நன்னெறியினின்று வழுவி விழுந்தாலும், வீழ்ந்ததன் துன்பம் தாக்கா வண்ணம் தடுத்துக் காப்பாற்றுவான். இப்பெருமானை, தனிக்கூத்துடையானைக் காணப் பெற்ற பேறு பெரும்பேறு என்று களிப்பு மீதுாரப் பாடுகின்றார். திருச்சிற்றம்பலப்பதிகத்தில் மடித்தாடும் பெருமான் என்றெடுத்துப் பாடுகின்றார். துரக்கிய திருவடிகள் அடிமைத் திறம் வழுவி வழி தவறிச் செல்லும் பொழுது தாமே தடுத்தாளும் என்ற குறிப்புணர்த்திப் பாடுகின்றார். தவறுகளுக்குக் காலம் கைப்பட்டுத் தண்டனை பெறாமல் தாமே வினைதிருத்தி ஆட்கொள்ளும் பெருங்கருணை முதல்வன் என்று உலகத்தார் உய்த்துணரப் பாடுகின்றார்.

தில்லையில் சிலநாள் தங்கி வழிபாடியற்றிக் கொண்டு திருக்கருப்பறியலூர் சொல்கிறார்.

வழிபாட்டு நெறி

வாழ்த்தும் நெறி

நம்பியாரூரரின் திருத்தலச் செலவு தொடர்கிறது. தில்லையிலிருந்து திருக்கொகுடித் திருக்கோயிலுக்குச் செல்கிறார். இது திருக்கருப்பறியலூர் என்றும் அழைக்கப் பெறுகிறது. இத்திருத்தலத்தில் நம்பியாரூரர் அருளிச் செய்துள்ள பதிகம், தெள்ளுத்தமிழ்ப் பதிகம். இயற்கை வளம் கொழித்திடும் திருக்கருப்பறியலூரை வளமிக்க தமிழால் வாழ்த்தியுள்ளார். வளமும்-வாழ்த்தும் வாழ்த்தும்-வளமும்