பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

245



இனிய அன்புடையீர்! நாள்தோறும் உலகம் விழிப்பதற்கு முன் விழித்தெழுங்கள்! இயற்கை தழுவிய சூழ்நிலையை நாடிச் செல்லுங்கள்! புதிய காற்று, புத்துணர்வைத் தரவல்லது. உங்கள் தலைவனை, இறைவனை, துணைவனை உற்றிருந்து நினைந்து காணுங்கள்! தொழுங்கள்! இதுவே நம்பியாரரர் காட்டும் வழிபாட்டு நெறி!

மயக்கம் தெளியவில்லை!

அடுத்து வருவது அருமையான செய்தி! இறைவனை புகழ்ந்து பாட, துதிக்க, அருச்சனை செய்யப் புதிய புதிய சொற்களைத் தேடச் சொல்கிறார் சுந்தரர். கூறியதே கூறிக்கொண்டிருந்தால் என்றும் இளைஞனாக, புதுமைக்கும் புதியவனாக விளங்கும் இறைவனுக்கு உவப்பாக இருக்காது என்கிறார். ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? என்றோ வழக்கில் வந்த அஷ்டோத்திரம், சகஸ்ரநாமங்கள் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன. இந்த அருச்சனை நாமாவளிகள் புரியாத மொழியில் உள்ளன. உணர்வுக் கிளர்ச்சியினைச் செய்ய முடியாதன! ஒரோ வழி புரிந்தாலும அப்பொருள் நெஞ்சந்தைத் தொடுவதல்ல. அதனாலன்றோ சிவபெருமான் இந்த அருச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும்படி ஆரூரரைக் கேட்டுக் கொள்கிறார்! சொற்றமிழ் பாடுக என்றார்! நாள்தோறும் இறைவன் அனுபவிக்கும் அனுபவத்தில் விளையும் புதிய புதிய சொற்களைக் கொண்டு வழிபடுக என்றார் நம்பியாரூரர்! நம்முடைய நாட்டிலோ அஷ்டோத்திரம், சகஸ்ர நாமங்களின் மயக்கம் தெளிந்த பாடில்லை.

மண்ணிப்படிக்கரை மாண்பினன்

நம்பியாரூரர் திருக்கருப்பறியலூர் இறைவனைப் போற்றி வணங்கிக் கொண்டு மண்ணியாற்றங் கரையிலுள்ள