பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

247



தன்னை நினைக்கத் தந்தவன்!

இடையில் உள்ள திருவாழ்கொளிபுத்துார் என்ற திருத்தலத்தை நினையாது-தொழாது சென்று விடுகிறார் நம்பியாரூரார். ஆனால் சற்றுத் தொலைவு சென்றவுடன் நினைவு வருகிறது. திருவாழ்கொளிபுத்துரர் இறைவனை நினைந்து திரும்பி வந்து வணங்குகின்றார். மறந்து நினைந்து வாழ்த்தியதால் இத்திருப்பதிகத்தில் அரனை "என்னை நினைக்கத் தருவானை” என்று நினைந்து பாடுகின்றார். பாடல் முடிவில் "வாழ்கொளிபுத்துார் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே! என்றும் பாராட்டுகின்றார்.

எல்லாமாக இருக்கும் இறைவன்

திருவாழ்கொளிபுத்துரை வணங்கிக் கானாட்டு மூள்ளூர் என்ற திருத்தலத்திற்குச் செல்கின்றார். கானாட்டு முள்ளுர்த் திருத்தலம் காவரியின் வடகரையில் உள்ளது. தற்போது கானாட்டாம்புலியூர் என்ற பெயரில் வழங்கப் படுகிறது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் பதஞ்சலி நாதர் அம்மையின் பெயர் கானார் குழலி, இறைவனின் பெயர் பதஞ்சலிநாதர், என்றிருப்பதால் பதஞ்சலி முனிவர் பூசித்த தலமென அறிக. இத்திருத்தலம் சிதம்பரத்திலிருந்து தென்மேற்கே சற்றேறக்குறைய 20 கல் தொலைவில் இருக்கிறது. செல்லும் வழியில் காட்டு மன்னார்குடி ஓமாம்புலியூர் என்ற ஊர்கள் உள்ளன. இத்திருத்தலத்திற்கு நம்பியாருரர் வரும்பொழுது பெருமான் எதிர் கொள்காட்சி யளிக்கின்றார். கானாட்டு மூள்ளுர்த் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை எல்லாமாக இருக்கும் இறைவன் என்று போற்றித் துதிக்கின்றார்.


ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தான்ாய்
ஊர்வனவும் திற்பனவும் ஊழிகளும் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்