பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்கும்
கருமேதி செந்தாம ரைமேயும் கழனிக்
கானாட்டு முள்ளுரில் கண்டுதொழு தேனே!
(ஏழாந்திருமுறை, பா.405)


கானாட்டு முள்ளூர் இன்று ஒரு சிற்றுாராக இருக்கிறது. அன்று கானாட்டு முள்ளூரில் திருமகளும் விரும்பும் செல்வத்தையுடையவர்கள் இருந்ததாக ஆரூரர் பாடுகின்றார்.

சித்தநிலைத் திருப்பதிகம்

கானாட்டு முள்ளூரிலிருந்து நம்பியாரூரர் பயணத்தைத் தொடங்குகிறார். திருஎதிர்கொள்பாடியைச் சென்றடைய பயணம் நடைபெறுகிறது. இந்தப் பயணத்தில் நம்பியாரூரர் வழிநடையிலேயே எதிர்கொள்பாடியினை நினைந்து பதிகம் பாடிக் கொண்டே நடக்கிறார். இத்திருப்பதிகத்தை வழிநடைப் பதிகம் என்றுதான்் கூற வேண்டும். எதிர்கொள் பாடித் திருத்தலத்தில் இறைவன் முன் பாடிய பதிகம் கிடைக்க வில்லை. இத்திருப்பதிகத்தைச் சித்த நிலைத் திருப்பதிகம் என்று வழங்குவதுமுண்டு. இத்திருப்பதிகத்தின் அமைப்பும் இதற்கிசைந்தவாறு இருக்கிறது.

வாழ்க்கையைப் பயனுடையதாக்குக!

வாழ்க்கையென்பது ஒரு பயணம். இந்தப் பயணத்தில் தோற்றமுண்டு; மரணமுண்டு. இந்தத் தோற்றத்திற்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட வாழ்க்கையைப் பொருளு டையதாக்க பயனுடைய தாக்கவேண்டும் என்பது பதிகத்தின் செழும்பொருள். வாழ்க்கைக்குப் பயன்படும் யாக்கை தேய்ந்து தேய்ந்து கடைசியில் இற்று வீழும் தன்மையுடையது. ஆதலால், இந்த வாழ்க்கை அத்தகைய இழி நிலையை