பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

249


அடைந்து மரணம் வருவதற்கு முன்பு பயனுடையதாக்க வேண்டுமென்று நம்பியாரூரர் வலியுறுத்துகிறார். இதனை.

தோற்ற முண்டேல் மரண முண்டு துயரமனை வாழ்க்கை
மாற்ற முண்டேல் வஞ்ச முண்டு நெஞ்சம்னத் தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல்நீள் சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி யென்பதடைவோமே.
                                                                                   (ஏழாந்திருமுறை-63)
செடிகொள் ஆக்கை சென்று சென்றுதேய்ந்தொல்லை வீழாமுன்
வடிகொள் வண்ணார் வஞ்சனையுட்பட்டுமயங் காதே
கொடிகொள் ஏற்றர்வெள்ளை தீற்றர் கோவணஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி யென்பதடைவோமே!
                                                                                 (ஏழாந்திருமுறை-64)

இத்திருப்பதிகம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. தோற்றமுண்டேல் மரணமுண்டு என்ற கருத்து, உயிருக்கு உரியதன்று. உயிருக்குத் தோற்றமுமில்லை; மரணமுமில்லை என்பது தமிழ்க் கொள்கை உயிர் உய்தற்கு எடுத்துக் கொள்ளும் கருவியே உடம்பு, இந்த உடம்பிற்குத் தோற்றமும் உண்டு அழிவும் உண்டு. உயிர் எடுத்த உடம்பினுள் இந்த மானுட உடம்பு அருமையானது ஆற்றல் மிக்குடையது; பன்னோக்குடையது. ஆனாலும் தேய்தலுக்குரியது; அழிதலுக்குரியது. அதனால் மிகச் சிறந்த இந்த மானுட உடம்பு அழிவதற்கு முன்பே, மீண்டும் ஓர் உடம்பை எடுக்க