பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

255



பரவையார் வரவேற்பு

திருமாளிகைக்கு வந்த நம்பியாரூரைப் பரவையார் வரவேற்கின்றார். பிரிவின் காரணமாக வருந்தும் உணர்வு இருக்கிறது. ஆயினும் நம்பியாரூரரை வரவேற்பதில் அந்தப் புழுக்கம் இல்லை. உள்ளத்தில் பொங்கி எழுந்த பெருவிருப்பத்துடன் தோழியர்களுடன் கூடிப் பாராட்டி வரவேற்கின்றார். நீண்ட பிரிவினையை, நயமாக எடுத்துக் கூறும்பாங்கு அருமையாக இருக்கிறது. நகைச்சுவை நிறைந்த பகுதி.

‘எங்களையும் நினைந்தருளிற்று.'

என்ற அடிகள் ஆழமானவை! நம்பியாரூரர் திருத்தலம் தோறும் சென்று இறைவனையே வணங்கி வாழ்த்தி வருகின்றார். அவருக்கு இறைவனே நினைவு, உணர்வு; எல்லாம். இது நம்பியாரூரரின் நடைமுறை வாழ்க்கை இடையில் பரவையாரிடம் வந்துள்ளார். அதனால் பரவையார் "எங்களையும் நினைந்தருளி” என்று கேலி செய்கிறார். நம்பியாரூரர், பல நாள்கள் பரவ்ையாருடன் சேர்ந்து மகிழ்ந்து வாழ்கின்றார்.

திருக்குளத்தில் பொன் தேடல்

ஒருநாள் நம்பியாரூரர் முதுகுன்றத்தில் பொன் பெற்றதையும் அப்பொன்னை மணிமுத்தாற்றில் விட்ட தையும் பரவையாரிடம் கூறி, அப்பொன்னைத் திருவாரூர் கமலாலயத்தில் எடுக்க வேண்டும் என்றருளிச் செய்து கமலாலயத்திற்கு அழைக்கின்றார். இது கேட்டுப் பரவையார் வியப்படைகின்றார். "என்ன அதிசயம்? சொல்வது என்ன?” என்று சிரித்துக் கேட்கின்றார் பரவையார். நம்பியாரூரர் 'என்னுடைய தலைவன்' அருளால் நடக்கும். நான் குளத்தில் பொன்னெடுத்துத் தருவேன் என்று அழைக்கின்றார். பரவையாருடன் திருவருட் பூங்கோயில் புகுந்து இறைஞ்சிப்