பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உண்பது உடல் நலத்திற்குக் கேடு. தாமே விரும்பி வலிந்தாட் கொண்ட நம்பியாரூரரைப் பாதுகாக்கக் குருகாவூர் அமர்ந் தருளும் இறைவன் காத்திருந்தார். தம்பிரான் தோழரும் திருத்தொண்டர்களுடன் தண்ணீர்ப் பந்தலையடைந்து உட்புகுந்தார். -

வேதியர் வடிவில் நின்றருளும் இறைவன்பால் இனந் தெரியா ஈர்ப்பில் தம்பிரான் தோழர் இறைவனருகில் சென்று "சிவாய நம" என்று பேசி அமர்கின்றார். அதாவது பழைய காலத்தில் ஒருவரையொருவர் சந்திக்கின்றபோது முதலில் "சிவாய நம” எனச் சொல்வது மரபு. இப்போது இந்த மரபைச் சைவத் தமிழ் மக்கள் கடைப்பிடிப்பது நல்லது. ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது "சிவ சிவ" என்று கூறலாம். வேதியர் (சிவம்) நம்பியாரூரருக்குப் பொதி சோறளிக்கின்றார். நம்பியாரூரர் யாண்டும் எளிதில் உண்பவரல்லர். ஆனாலும் ஈண்டு விலக்க இயலாது என்று கருதி வாங்கி உண்கின்றார். சுந்தரர் சிவச்சிந்தனையே தொழிலாகக் கொண்டவர். தண்ணீரைக் குடிக்கும் பொழுதும் இறைவன் திருவருளைச் சுவைத்து அனுபவிப்பது போல் குடித்தாராம். இறைவன் நாமத்தை உளம் நிறைந்து வழியும் பெருகிய அன்பால் வாழ்த்தி உண்கின்றார். ஈண்டு அவ்வுணவை விலக்கா மைக்குக் காரணம் சிவம் தருவது. அடுத்து, பசியின் கொடுமை. தம்பிரான் தோழருடன் அடியார்கள் மற்றும் பசித்து வந்தோர் எல்லோரும் உண்டார்கள். உண்டு முடிந்த பின் ஆரூரர் ஓய்வாகக் கண் துயின்றார். உண்டபின் உறங்கலாம்-உறங்கக் கூடாது என்று இரு வேறு கருத்துள்ளது. தமது நாட்டு மரபு பகலில் உண்ட பின் உறங்கக் கூடாது என்பது, மேலை நாட்டார் கருத்து உறங்க வேண்டும் என்பது. பகலில் ஒரு மணி நேரம் (பகல் 1 மணிமுதல் 2 வரை) உறங்குவது பல மணி நேரம் உறக்கம் கொண்ட பயனைத் தரும் என்று கூறுகின்றனர். நமது மரபிலும் பகலில் இவ்வாறு உறங்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை இதனால் அறிய