பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழும்பொழுது இடர்கள் வாராமல் காத்து நிற்கும் அருள் திறனை ஆரூரர் நினைந்துருகிப் பாடுகின்றார்.

வெள்ளடைத் தலைவா! என் மரணத்தைத் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளிய தலைவா! அடியார்களின் துன்பத்தை இறைவன் ஒருபோதும் தரியான் என்பதை உணர்த்த "போந்தனை தரியாயே!” என்றார். நம்பியாரூரர் நன்றிக் கட்டுப்பாட்டுணர்வுடன் சாவே வந்தாலும் நின் கருணையை மறக்ககில்லேன் என்று திருவருள்பால் தாம் கொண்டுள்ள கடைப்பிடியை உணர்ந்துகின்றார்.

இறைவன் தோலுடுத்து உழல்கிறான். ஆனால் நம்பியாரூரருக்குப் பொன், துகில் முதலியன தந்தருள் செய்கிறான். இறைவன் உயிர்கள் மாட்டுக் கருணையுடன் பொன்னும், மணியும் தந்து போகத்தில் புணர்த்தி வாழ்வித்தருள்கின்றனன் என்ற சைவ உண்மை உணர்த்தப் பெறுகிறது. திருக்குருகாவூர் வெள்ளடையில் எழுந்தருளியுள்ள இறைவனை, இன்னமுதைச் சுந்தரர் தம் கண்களால் பருகி அனுபவித்தார். திருவருள்-திருவருளின்பம் நுகர்ச்சியாதலால் கண்களால் பருகியதாகக் கூறினார். பெருமானை உள்ளத்தே நாடி போக நிலையில் அனுபவித்து வரும் பெருங்காதலுடைய நம்பிகள், பெருகிய அன்புடன் இறைவனைத் தொழுது, சூழ்ந்துவந்த தொண்டருடன் திருக்குருகாவூர் வெள்ளடையில் தங்கி வாழ்ந்தார். இத்திருத்தலத்தில் பண்ணார்ந்த திருப்பதிகம் பாடியே வணங்கி வந்துள்ளார். இந்தத் திருப்பதிகம் கிடைத்திலது. சில நாள் திருக்குருகாவூர் வெள்ளடையை வணங்கி மகிழ்ந்த பிறகு இறைவன் விருப்புடன் எழுந்தருளியுள்ள பல திருத்தலங்களையும் வணங்கிக் கொண்டு திருத்தில்லையை அடைநதார்.

திருக்கழிப்பாலை

இத்த யாத்திரையில் தென் திருமுல்லைவாயில், திருமயேந்திரப் பள்ளி, திருநல்லூர் பெருமணம் முதலிய