பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

281



"கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்(று)
உச்சம் போதா ஊருர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே!”

என்றும்,

"காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்ளல் அழகியதே!”

என்றும் வரும் திருக்கச்சூர்த் திருப்பதிகப் பகுதிகள் நம்பியாரூரரின் வரலாற்றுக்குரிய அகச்சான்றுகள்.

இந்த வரலாற்றின் மூலம் பெறக்கூடிய படிப்பினை, பசி ஒரு பிணி, கொடிய பிணி, பசி நீங்கி வாழ்ந்திடச் சோறளிப்பது வாழ்வியல் ரீதியான கடமை - அறம் என்பதாகும். இந்தப் பணியை இறைவனே மேற்கொண்டு செய்தது, சைவத் தமிழுலகம் படிப்பினை பெற்றுக் கொள்ளவேயாம்! ஆனால் படிப்பினை கிடைத்ததா? இன்றைய சமய உலகு என்ன செய்கிறது? புதுப்புதுப் புனைவுகளை - சடங்குகளை இயற்றுகிறது! பிரச்சாரம் பலமாகச் செய்கிறது! ஆனால் எங்கேயும் தொண்டினைக் காணோம்; திருத்தொண்டினையும் காணோம்.

ஒருவரின் துன்பம் நீங்கினால் மட்டும் போதாது! துன்பநீக்கப் பணி, விலைப்பாடும் அருமைப்பாடும் உடையது என்று உணர்தல் வேண்டும். அதனால் நினைப்பின் அளவிலேயே காரியங்கள் ஆற்றவல்ல இறைவன் வீதிதோறும் நடந்து, மனைதோறும் சென்று இரந்து வருகின்றான். இத்தகு நிகழ்வுகளே, அன்பைத் தூண்டி இயக்கும். இன்று இதுபோன்ற நிகழ்வுகளைக் காண இயலவில்லை. மாறாகப் பசுத்தோல் போர்த்த புலிகள் போன்று களவும், சூதும்