பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

287


மனைவியர் ஆகிய அனைத்தையும் இறைவனிடம் கேட்டுப் பெற்றார் என்பதைக் "கேட்பதெல்லாம் கேட்டேன்” என்று கூறுகிறார். இதில் ஆரூரர் உணர்த்த நினைப்பது தாம் வாழ்தலுக்கு உரியவற்றைக் கேட்பதெல்லாம் கேட்டேன் என்றார். கேட்கக் கூடாதென எதுவும் கேட்கவில்லை என்றார்.

இந்த மானுடவாழ்க்கை, உய்தியைக் குறிக்கோளாக உடையது. உடலால் வாழ்ந்துதான் உய்தியை அடைய வேண்டியிருக்கிறது. ஆதலால் உடம்பொடு கூடிய வாழ்க்கை துய்த்து மகிழும் வாழ்க்கை இன்றியமையாதது. உயிர்கள் துய்ப்பனவாய் அமைந்துள்ள பொருள்களே உய்வைத் தரத்தக்கன. துய்ப்பனவெல்லாம் துய்த்து வேட்கை தணிந்துழித் துறவுள்ளம் தொடர்கிறது. பிறவாமை வேண்டிப் பெறும் உணர்வு கால்கொள்கிறது. வன்தொண்டர் கேட்பதெல்லாம் கேட்டுத் துய்த்தபிறகு பிறவாமை கேட்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டார்.

இறைவனுக்குக் குறிக்கோள் உயிர்களுக்கு உய்தியை வழங்குதல்; இன்ப அன்பினை வழங்குதல். உயிர்களுக்குக் குறிக்கோள் இறைவனை நாடி உய்தி பெறுதல். இன்ப அன்பினில் திளைத்தல், குறிக்கோள் தழுவியவர்கள் குறிக்கோளை எந்தச் சூழ்நிலையிலும் அடைய முயற்சி செய்வர்; அடைவர்; இறைவனுக்கு ஆரூரரை ஆட்கொண்டருளுவது குறிக்கோள். அதனால் ஒரோவழி நம்பியாரூரர் மறந்தாலும் இறைவன் நம்பியாரூரரை மறப்பதில்லை. இறைவன் ஏதாவதொரு யுக்தி மூலம் ஆரூரர் மனத்துள் புகுந்து நின்றருள் செய்பவர், நமது வாழ்க்கையில் என்றும் தப்பாது நின்றின்பம் பயப்பதால் இறைவனுக்கு மெய்ப்பொருள் என்றொரு திருநாமம் உண்டு.

வன்றொண்டர் இறைவன் திருவருளைப் பெற்று மகிழும் நிலையில் "என்னால் என்ன குறை” என்றே