பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அருளியது என்று உணர்த்துகின்றார். காலனுடைய கால முதன்மைசுடப் பெருமானால் பறிக்கப்பெற்று, திரும்ப அளித்த வரலாற்றை நினைவூட்டுகின்ற பாடல் இப்பதிகத்தில் உண்டு.

"மெய்யன்வெண் பொடியூசும்
விகிர்தன் வேதமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக்
காலன்கா லம்மறுத்தான்்
பைகொள்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டுர்
ஐயன்னங் கள்பிரானை
அறியாதார் அறிவென்னே!

(ஏழாந்திருமுறை-878)


இப்பாடல் கற்றுணரத்தக்க பாடல். இறைவன் மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன். பொய்க்கு எதிர்மறை மெய். மெய் என்பது உண்மை. உண்மையாவது உள்ளது. என்றும் உள்பொருள் இறைவன் என்றும் உள்ளவன் தோற்றமும் ஈறும் இல்லாதவன்; பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; இவனே பிறவாயாக்கைப் பெரியோன். இறைவன் சிவபெருமான், யாதொரு அந்தமும் இல்லாதவன் என்பதனை உணர்த்து வதே வெண்பொடியாகிய திருநீறு. கடையூழிக் காலத்தில் உலகம் ஒடுங்கும். ஆன்மாக்களும் இளைப்பாறுதல் கருதி ஒடுக்கப்பெறும். இந்தக் கடையூழியில் திரும்ப உலகைத் தோற்றுவித்தருளவே இறைவன் கடையூழிக் கூத்தாடு கின்றான். இந்தக் கடையூழிக் கூத்தில் எழும் புழுதியே திருநீறு என்பது கருத்து. ஆதலால் காலதத்துவத்தின் தலைவன் சிவமே. சிவம்தான்் காலனுக்குக் காலமுதன்மையைத் தந்தருளினன் என்ற கருத்து அறியத்தக்கது.

ஆரூரர், திருமாற்பேறு, திருவல்லம் ஆகிய திருத்தலங்களை வழிபட்டுக்கொண்டு திருக்காளத்திக்குச்