பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

297


குறிப்பிடுகின்றார். ஆம்! சிறப்புப் பொருந்திய தமிழ்; சிறப்பினைத் தரும் தமிழ், வீடு பேற்றிற்குச் சிறப்பு என்றும் கூறுதல் தமிழ்மரபு. திருக்காளத்தியைக் 'கண்டார் காதலிக்கும்” திருத்தலமெனப் போற்றிப் பரவுகின்றார்! கண்ணப்பரின் அனுபவம், கண்டதும் காதலித்த அனுபவம்தான்ே!

சைவத் தமிழ்மரபு ஒரு கடவுள் வழிபாடு என்பதனை உணர்தல் நல்லது. நால்வர், நாயன்மார்கள் சிவ பெருமானையே போற்றி வணங்கியுள்ளனர். சுந்தரர் திருக்காளத்திப்பதிகத்தில், "உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேன்” என்று உறுதிபடக் கூறுவது ஒர்க: இந்தப் பதிகம் முழுவதும் இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றார். ஏன்? நம்பியாரூரர் நாடு சுற்றியவர்; ஆகமங்கள் வந்து புழக்கத்திலிருந்த காலம்! கடவுள் என்ற பெயரில் பல்வேறு மூர்த்தங்கள் வழிபாட்டுக்கு வந்து நடை முறையில் இருந்த காலம்! ஆயினும், நம்பியாரூரர் சிவபெருமானைத் தவிர, வேறொருவழிபடும் பொருளை அறியார். என்னே உறுதி! இன்று நம்பியாரூரருடைய இந்த உறுதி இல்லை. அதனால் கடவுள் வழிபாட்டிற்குக் காலம் கூடுதலாகச் செலவாகிறது. அதே போழ்து உறுதியின்மையால் பயனும் இல்லாமல் போகிறது. ஆயிரம் ஆயிரம் திருமேனிகள் இறைவனுக்கு இருக்கலாம். ஆயிரம் கணநாதன் நம்பியாரூரருக்கு ஞானாசிரியனாக, ஞானமாக, நெறியாக, தோழமையாக விளங்கிய அருட்பெருக்கினை வாழ்த்தி மகிழச் சேக்கிழாரால் முடிந்தது.

நம்பியாரூரர், திருக்காளத்தியிலிருந்த படியே, வடபுலத்தில் உள்ள சீர்ப்பருப்பதத் திருத்தலத்தையும் திருக் கேதாரத் திருத்தலத்தையும் நினைந்து போற்றிப் பதிகம் பாடியருளினார். வடபுல வெல்லை அரணாக உள்ள இமயமலைச் சாரலில் விளங்கும் திருத்தலங்கள் திருச்சீர்ப் பருப்பதமும் திருக்கேதாரமுமாகும். இத்தலங்கள் இயற்கை