பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

303


செய்வான் நம்பியாரூரன் என்று உறுதி கூறுகின்றார். என்னே ஈசன் திருவிளையாடல்.

திருஒற்றியூரையும், சங்கிலியாரையும் பிரியாமல் நம்பியாரூரர் வாழ்ந்தால் பரவையார் நிலை என்னாவது? இல்லை! இல்லை. "உன்னை இகந்து போகாமை” என்பது தான் இறைவனருளிய உறுதி மொழி. நம்பியாரூரர் சபதம் செய்ய ஒருப்படுகின்றார். ஆயினும் உண்மையான சபதமாக அல்ல. சபதம் செய்யும் பொழுது சந்நிதியில் இறைவன் இருக்காது, இடம் பெயர்ந்து மகிழ மரத்தடியின் கீழ் எழுந்தருள வேண்டும் என்று வேண்டுகிறார். தமக்கு அன்பு பட்டார் பாரமும் பூணும் தன்மையுடைய ஈசன் இதற்கும் உடன்படுகின்றார். ஆனால், சங்கிலியாரிடம் "மகிழின் கீழ் சபதம் கேள்” என்று உணர்த்தி விடுகிறார். சங்கிலியாரிடம் குறிப்பில் உணர்த்தியதை பெருமான் நிறைவேற்றித் திருமணம் செய்வித்தருள்கின்றார்.

மகிழின் கீழ் சத்தியம் - சரியா?

நம்பியாரூரர், இறைவன் முன்னிலையில் இறைவன் சந்நிதியில் சத்தியம் செய்ய முன் வராமையை எண்ணுக. ஆம்! மானுடவியல் குற்றங்கள் மிகுதியும் உடையது, வழுக்கி விழும் நிகழ்வுகளே வாழ்க்கையில் மிகுதி. “மனிதம்' என்ற பெயரே நிறைவு பெறாமை என்று பொருளாகும் என்பார் லெராய் பிரெளன்லோ (Leroy Brownlow) மனிதத்தின் பாவ மன்னிப்புகளிலேயே கடவுளின் புகழ் இருக்கிறது. ஆதலால் இறைவன் சந்நிதியில் இறைவன் பெயரால் சத்தியம் செய்வதை விரும்பாமல் கருவறையைவிட்டு மகிழின் கீழ் இருக்குமாறு இறைவனை வேண்டுகிறார். நபிகள் மதினாவில் மசூதியின் திசை நோக்கிக் கால் நீட்டித் தொழுததை மக்கள் ஆட்சேபித்துள்ளனர். அதற்கு நபிகள் இறைவன் இல்லாத திசையைக் காட்டியருளும்படி கேட்டதாக ஒரு வரலாறு உண்டு. எள்ளில் எண்ணெய்போல் இறைவன் எங்கனும்