பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

311


நோய் நீக்கியருளுமாறு வேண்டுகின்றார். இறைவனும் வட குளத்தில் குளிக்கச் சொல்கின்றான். நம்பியாரூரரும் திருத்துருத்தி வடகுளத்தில் நீராடி வந்தடைந்த நோய் நீங்கி எழுகின்றார். திருவாரூருக்குப் பயணம் தொடர்கிறது.

நம்பியாரூரருக்கு ஈடுபாடு மிகுதியும் உடைய திருத்தலம் திருவாரூர். ஏன்? திருவாரூர் இறைவன் தானே பரவையாரை மணம் முடித்துக் கொடுத்தார். நம்பியாரூரரின் அகத்திலும் கண்ணிலும் திருவாரூரே இடம் பெற்றிருந்தது. திருத்துறையிலிருந்து திருவாரூர்க்குப் பயணமானார்.

நம்பியாரூரர் இன்புறு நலன்கள் பல நாடினும் திருவருளை மறப்பதில்லை என்பதைச் சேக்கிழார், "திருவருள் மறவாது” என்று கூறி விளக்குகிறார். நம்பியாரூரர் தொண்டர்களுடன் கூடி இறைவனைப் பாடிப்பரவுவதால் தொண்டர்களுக்கும் பயன்; நம்பியாரூரரின் அன்பும் பெருகி வளர்கிறது. இந்தப் பெருகிய அன்புடன் மாலை நேரத்தில் திருவாரூர்க்குள் புகுகின்றார். முதலில் திருவாரூர் பரவையுண் மண்டளித் திருக்கோயிலை வணங்கி மகிழ்கின்றார். இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் தூவாயர். அதாவது தூயவாயினை உடையவர். இறைவனுடைய திருவாய்க்கு என்ன தூய்மை?

ஒரு காலத்தில் திருவாரூரையே அழிக்கத்தக்க அளவுக்குக் கடற்கோள் நிகழ்ந்தது. அப்போது அந்தக் கடல் நீர் முழுவதையும் குடித்துத் திருவாரூரைக் காப்பாற்றியதால் தூய வாயாயிற்று! தூய்மைக்கு இலக்கணம் நீராடலும், நறுமணம் பூசுதலும், புலாலுண்ணாமையும் மட்டுமல்ல; பலகாலும் உண்ணாமல் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் அது நோன்பாகாது! விரத சீலர் அவ்வளவுதான்! அதனால் பயன் என்ன ? ஆனால் உண்மையான நோன்பு பிறருக்கென்று முயல்வதுதான்! தூய்மை என்பது பிறர்க்கு எழும் தீமையைத் தாம் ஏற்றுக் கொள்ளுதல் என்பது தான்!

பரவையுண் மண்டளித் திருக்கோயிலை வணங்கி மகிழ்ந்து திருவாரூர் மூலட்டானத்து இறைவனை வணங்க