பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

319


கலிக்காமரின் சினம் சுந்தரருக்குத் தெரிய வந்தது. சுந்தரரும் கலிக்காமர் கருத்துக்கு-கலிக்காமரின் சினத்துக்கு உடன்படுகிறார். சுந்தரர் தன் பிழையை உணர்கிறார். இனி இதற்கு என்ன தீர்வு? ஆளுடைய சிவனிடமே தீர்வுக்குரிய வழி காட்டும்படி வேண்டுகிறார்.

ஆளுடைய சிவனின் இயல்பு, பிரிந்தவரைச் சேர்த்து வைத்தல்தான்! ஏயர்கோன் கலிக்காமரும் சுந்தரரும் நட்புரிமை பூண்டுவாழ வேண்டும் என்று ஆளுடைய சிவன் விரும்புகின்றான். ஏயர்கோன் கலிக்காமருக்குச் சூலை நோய் வருகிறது. தவறு செய்கிறோமோ என்ற உணர்வு-நெஞ்சில் நடுக்கம். சுந்தரருக்கு அறவே இன்றி எங்ங்னம் செய்யத் துணிவு வந்தது? தீவினை செய்ய அஞ்சும் இயல்பு இயற்கையானது. அந்த இயல்பையும் சுந்தரர் இழந்தது எப்படி? ஆட்கொண்டருளும் சிவனை, தம்பிரானைத் துதுவிடுதலே பிழை! அதுவும் பெண்பால தூது அனுப்பினார் என்பது பெரும்பிழை. பிழை மட்டுமல்ல. பழியும் கூட இந்த தூதுப் பணியை மற்றவரைக் கொண்டும் செய்து முடித்திருக்கலாம். அப்படி முடிப்பதற்குரிய ஆளும் கிடைக்கவில்லை போலும்! ஆட்கொண்டருளும் சிவனுக்கு அடியார்கள் பஞ்சம் போலும்! கலிக்காமரின் சினம் எண்ணெய் வழிப்பட்ட எரிபோல வளர்கிறது. ஆட்கொண்டருளும் சிவனுக்கு, அவன்றன் புகழுக்கு இழுக்குத்தேடிய செய்தி கிடைத்த போதே சாதல்வேண்டும் அல்லது பழிச்செயல் செய்தவரைக் கொல்ல வேண்டும். இல்லாமற்போனால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கலிக்காமர் எண்ணுகிறார்.

இச்சூழ்நிலையில் சூலைநோய் வருகிறது. சூலை நோயால் வருந்துகின்றார். ஆட்கொண்டருளும் சிவன், நம்பியாரூரர் வந்து சூலைநோய் தீர்ப்பர் என்று உணர்த்துகின்றார். நம்யாரூரரும் வருகின்றார். நம்பியாரூரர் தன்னைக் காணவரும் செய்தி, கலிக்காமருக்கு உவப்பாக