பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(4) இசைப் பள்ளிகளின் நடைமுறை பற்றி ஆராய்தல்.
6. இசை ஞானியார் (55) சித்திரை - சித்திரை. (1) சமயச்சார்புடைய மகளிர் மன்றம் அமைத்தல், சங்க வளர்ச்சிக்குரியன எண்ணிச்செய்தல்.
(2) மகளிர் நலம் பேணுதற்குரியன எண்ணிச் செய்தல்.
(3) கருவுற்ற பெண்களுக்குச் சத்துணவு, நற்செய்திகள் கிடைக்கச் செய்தல்.
(4) மகப்பேறு மருத்துவ மனைகளுக்குச் சென்று திருநீறு முதலியன வழங்குதல்.
(5) குன்றக்குடி ஆதீன தேவாலய மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவத் துறைக்கு வசதிகள் செய்தல்.
(6) குன்றக்குடி இசைஞானியார் மகளிர் மன்றம் ஆண்டுவிழா நடத்துதல்.
(7) குன்றக்குடி மகளிர் மன்ற உறுப்பினருடன் கலந்துரையாடுதல், விருந்தளித்தல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
7. இடங்கழி நாயனார் ஐப்பசி - கார்த்திகை (1) திருக்கோயில் திருமடத்தில் தொண்டு செய்யும் அடியார்களுக்கு அமுதளித்தல்.
(2) அடியார்களுக்கு வழங்கப்பெறும் படித்தரங்கள் பற்றி ஆய்வுசெய்தல்.
(3) அடியார்களின் நலம் நாடுதல்.