பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21. கழற்சிங்க நாயனார் வைகாசி-பரணி (1) சிவ பூசைக்குப் பயன்படும் மலர்களை உற்பத்தி செய்யும் நந்தனவனங்களில் பிறபயிர் செய்யாதிருத்தல்
(2) நந்தனவனத்தைச் செழுமைப் படுத்துதல்.
(3) இறைவனுக்கு நறுமண மலர்களால் மலர்முழுக்குச் செய்தல்.
22 காரி நாயனார் மாசி-பூராடம் (1) திருக்கோயில் திருத்தல வரலாறுகள் அச்சிடுதல்.
(2) வரலாறு எழுதுவித்தல்.
(3) வழிபாட்டுப் பாடல்கள் பாடுவித்து அச்சிடுதல்.
(4) வழிபாட்டு நூல்கள், தல வரலாற்று நூல்கள் ஆகியவைகளின் விற்பனை வரவு செலவு பற்றி - ஆராய்தல்.
23 காரைக்காலம்மையார் பங்குனி-சுவாதி (1) திருக்கோயில்-திருமடத்தில் மாந்தோப்பு வளர்க்கத் திட்டமிடல். .
(2) மாந்தோப்பு வளர்த்தலும், கண்காணித்தலும்.
(3) மாந்தோப்பு வளர்ப்பு-பாதுகாப்புப் பணியாளர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலம் பேணுதல்.
(4) இறைவனுக்கு மாம்பழம் படைத்தல்.