பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(8) கள்ளிமந்தயம் அருள் நெறி உயர்நிலைப் பளள நடைமுறை பற்றி ஆய்வு செய்தல்.
26 கூற்றுவ நாயனார் ஆடி-திருவாதிரை. (1) அம்பலக்கூத்தன் சந்நிதிகள் தூய்மை செய்தல்.
(2) அம்பலக்கூத்தன் திருமேனிக்குப் பழக்காப்பிடுதல்,
(3) திருவமுதுக்கென்று நிலங்களை ஒதுக்குதல்.
27 கோச்செங்கட் சோழர் மாசி-சதயம் (1) திருக்கோயில்கள் பழுதுறாமல் பாதுகாக்கும் திட்டம் தீட்டுதல்-பாதுகாத்தல்.
(2) திருப்பணிகள் தொடங்குதல். திருக்கோயிலைப் பேணும் பணியாட்கள் (கொத்தனார், உழவாரம்) நலம் பேணுதல், கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல்.
(3) திருக்கோயில் காவல், திருமேனி காவல், மெய்காவல் முறை-வகைபற்றி ஆராய்தல்.
(4) மேற்படி காவல் செய்யும் ஊழியர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
28 கோட்புலி நாயனார் ஆடி-கேட்டை (1) திருக்கோயில் திருமடத்தின் தேவைக்கு நெல் சேர்த்தல்.
(2) களஞ்சியங்கள் பழுதுபார்த்தல், தூய்மை செய்தல்.
(3) திருவமுதுக்கென்று நிலங்களை ஒதுக்குதல்.