பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36. செருத்துணை நாயனார். (11) (21) (57) ஆவணி-பூசம் (1) சிவபூசைக்குரிய மலர்கள் தொடுக்கும் இடத்தில் (ஈ, எறும்பு, கொசு மொய்க்காமல்) மலர்கள் பாதுகாப்புக்குரிய ஏற்பாடு செய்தல்.
37. சோமாசிமாற நாயனார். வைகாசி-ஆயிலியம் (1) நாள்தோறும் வேத வேள்வி (நித்யாக்கினி) செய்யும் திருக்கோயில் வேத அந்தணர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல் அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
(2) அன்றையதினம் சிறந்த முறையில் வேத வேள்வி செய்யச் செய்தல்.
(3) திருக்கோயில்களில் உருத்திர வேள்வி. உருத்திர செபம்-சிறப்புத் திருமுழுக்கு ஏற்பாடு செய்தல்.
38 தண்டியடிகள் பங்குனி-சதயம் (1) திருக்குளம் தூய்மை செய்தல்-திருக்கோயில் கிணறுகள் தூய்மை செய்தல்-திருக்குளம் புழுது பார்த்தல்-திருக்குளத்துக்குத் தண்ணிர் வரத்துக் கால் வெட்டுதல்.
39. திருக்குறிப்புத் தொண்டர். சித்திரை-சுவாதி (1) (அ) பரிவட்டங்கள் இருப்பு எடுத்துச் சரிபார்த்தல். (ஆ) தூய்மை செய்தல். (இ) தூய்மை, செய்யும் இடம், முறை முதலியன பற்றி ஆய்தல்.
(2) பரிவட்டம் தூய்மை செய்யும் தொண்டு செய்வோருடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன செய்தல்.