பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50 நேச நாயனார் (3) பங்குனி-உரோகிணி. (1) திருமடத்து அடியார்கள், திருக்கோயில்களில் பணி செய்யும் அடியார்கள் ஆகியோருக்கு உடை வழங்குதல்.
(2) கைத்தறியாளர்களுக் குரிய நலம் நாடுதல்
51 புகழ்ச்சோழ நாயனார் கார்த்திகை-ஆயிலியம் (1) திருக்கோயில்-திருமடத்துச் சூழலில் இதர பொதுப்பணி மனைகளின் சூழலில் எல்லாரும் சிவசின்னம அணிதற்குரிய வாய்ப்புகளை உருவாக்குதல்.
52 புகழ்த்துணை நாயனார் ஆவணி-ஆயிலியம். 1. (அ) சிவாசாரியர்களையும், ஒதுவார்களையும், மற்ற பணியாளர்களையும் தீக்கை முதலியன செய்துகொள்ளத் தூண்டுதல். (ஆ) தீக்கை செய்வித்தல்.
(2) சிவாகமப் பயிற்சி செய்வித்தல், குறுகியகாலப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல், சிறப்பாக சிவாசாரியர்களுக்குச் சமய, விசேட, ஆசிரிய தீக்கைகள் செய்வித்தல்.
(3) திருக்கோயிலில் மூல மூர்த்தியின் சிவ பூசைக்குரிய திட்டங்கள் ஆய்வு செய்தல்-இயன்றால், சிவ பூசகர்களை அழைத்துச் சிவ பூசை செய்வித்தல்.
53 பூசலார் நாயனார் ஐப்பசி-அனுடம். (1) திருக்கோயில் திருமடத்துச் சூழலில் தியானம் செய்வதற்குரிய இடங்கள் அமைத்தல், சூழல் உருவாக்கல்