பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாயன்மார்களின் அடிச்சுவட்டில்

349


வழங்குவதுடன், தேவைக்குரிய தொகைகளையும் அனுமதி வழங்கி விடுதல் வேண்டும்.

7. 'திருத்தொண்டு' தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் கூடுமானவரை திருநட்சத்திர தினத்திற்கு முன்பே நடத்திவிடுதல் வேண்டும்.

8. சில நாட்கள் தொடர்ந்து சேய்ய வேண்டிய பணிகளாக இருப்பின், திருநட்சத்திர தினத்தன்று நிறைவேறத்தக்க வகையில் சில நாட்களுக்கு முன்பே தொடங்கி முடிக்க வேண்டும்.

9. திருநட்சத்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு, பாராட்டு, விருந்து ஆகியவை நடைபெற வேண்டும்.

10. திருத்தொண்டு செயல் குறிப்புக் கூட்டங்களில் எடுக்கப் பெறும் முடிவுகளைத் தொடர்ந்து கோப்புகள் திறந்து செயல்படுத்தி நிறைவேற்றி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தர வேண்டும்.

11. திருத் தொண்டுச் செயல் முறைத் திட்டம் செயலாக அமையும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். ஆரவாரமான விழாவாக மாறிவிடக் கூடாது. அது போலவே ஒரு புது வழிபாட்டுச் சடங்காகவும் மாறிவிடக் கூடாது. ஆனாலும், விழாப் பொலிவு இருக்கலாம்.

12. பாராட்டுக்கும், அபிவிருத்திக்கும். உரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி செய்தல் அவசியம்.

13. ஆதீன அலுவலகத்திலுள்ள வளர்ச்சித் துறையில் அமைந்துள்ள திருத் தொண்டுத்துறை, இந்த அறுபான் மும்மை நாயன்மார் திருத்தொண்டுத் துறையை வழிநடத்தும் அலுவலகமே. ஆதீன-தேவாலய-சமூக கல்வித் துறைகளின் மேலாளர்கள் இதனை உண்மையில் நிறைவேற்றும் பொறுப்புடையவர்கள்.