பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

43


தவமுடையார்க் காகும்” என்ற வள்ளுவமுங்கூட, உடலாற் செய்யும் தவநெறிச் செயல், உள்ளத்தால் தவமுடையார்க்கே

யாகும் என்ற கருத்தில் கூறப்பட்டதாகும். அஃதன்றி,

"நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி-ஊரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி”

(புறப்பொருள் வெண்பாமாலை)

என்று இலக்கணம் கூறினாரேனும், அது தமிழக வழக்கில் மிகுதியும் இல்லை. தவம் பயிலுதற் கேற்ற இடம், வீடன்று காடு என்ற கருத்து தமிழர்க்கில்லை. மனையகன்று வாழ்வோரே மாதவம் இயற்ற முடியும் என்ற நம்பிக்கை தமிழர்க்கில்லை. சிவபெருமான் தவநிறை செல்வி சங்கிலியா ரிடம் சுந்தரரை மணக்கத் துதுசென்று கேட்கும்பொழுது, சுந்தரரைச் சங்கிலியாருக்கு அறிமுகப்படுத்திக் கூறும் பொழுது,

"சால என்பால் அன்புடையான் மேருவரையின் மேம்பட்ட தவத்தான்"

(239)

என்று சேக்கிழார் அருளிச் செய்துள்ள அருமை அறிந்து இன்புறத்தக்கது. எந்த ஒன்றும் இன்புறுதல் என்ற அடிப்படையில் செய்தால் அவமாகவும், இன்புறுத்தல் என்ற அடிப்படையில் செய்தால் தவமாகவும் ஆகும். சுந்தரர், இறைவனைப் பொன் கேட்டுப் பெற்றார்; நறுமணங்கமழ் சாந்து கேட்டுப் பெற்றார்; நங்கையர் இருவரை அவன் மூலமே கேட்டுப் பெற்றார். ஆயினும், யோக நெறி நின்றார் என்றே மரபுவழி மாறாது கூறும், சேக்கிழாரும், "தென்னாவ லுரர்மன்னன் தேவர்பிரான்

திருவருளால்

மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும்

மெல்லியல்தன்