பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள் 49


"நற்றமிழ் வரைப்பின் ஒங்கு நாம்புகழ்
திருநா டென்றும்
பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந்
தினிது காக்கும்
கொற்றவன் அநபா யன்பொற் குடைநிழற்
குளிர்வ தென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற
விளம்ப லாமோ!"

-62. திருநாடு-35

என்பது சேக்கிழார் பாடல்.

மேலும், அரசின் நெறிமுறை பற்றி மனுநீதிச் சோழன் வரலாற்றில் விரித்துப் பேசுகிறார். அரசநீதி என்பது உயிர் வேறுபாடின்றி, ஒத்த நீதியே வழங்குவதாகும். அரசநீதி என்பது அனைத்துயிர்களையும் அனைத்துத் துன்புறாமற் காப்பதாகும். இதனை,

"மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ?”

(36)

என்று சேக்கிழார் பாடுகிறார். இதுவே நீதியும் நியதியுமாகும். வளர்ந்த யுகம் என்று கருதத்தக்க இந்த நூற்றாண்டில் கூட ஒரே குற்றத்திற்கு ஏழைக்கொரு தண்டனை! செல்வர்க்கொரு தண்டனை! பிராணிகளைக கொன்ற யாருக்கும் இன்று மரண தண்டனை வழங்கும் சட்டமில்லை. மனிதனைக் கொல்லும் மனிதனுக்குரிய மரண தண்டனையைக் கூட நிறுத்த வேண்டுமென்ற கிளர்ச்சியிருந்து வருகிறது. ஆனால், சேக்கிழாரின் மனுநீதிச் சோழன் ஒரு பசுவின் கன்று இறப்பதற்கு-நேரிடையாகக் கூட அன்று-மகனின் தேரூர்ந்த