பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 குழி நிரம்பாத புன்செய்ப் பயிர் எப்படிச் சிறிதாகவும், பறித்தற்கு எளிதாகவும் இருக்குமோ, அதுபோல இளையான் குடிமாறனாரின் பாசப்பசை மிகமிக எளியது; அதுவும் பிறப்பின் சார்பால் விளைந்தது; அடியார்க்கு அமுது செய்விக்கும் அசைவில் ஆசையால் உருவானது. ஒரு பயிரை வேருடன் பிடுங்க வேண்டுமானால் அந்தப் பயிர் வளர்ந்துள்ள நிலம் நனைக்கப் பெற்று மண் நெகிழ்ந்து அவ்வழி பயிருக்கும் நிலத்திற்கு முள்ள பிடிப்புத் தளர்ந்திருத்தல் அவசியம். இளையான்குடி மாறனாரின் மனம் அன்பினில் நனைந்து தொண்டு நெறியில் நெகிழ்ந்து மிச்ச சொச்சமில்லாமல் முற்றாகப் பாசப் பசை நீக்கத்துக்குத் தகுதியாக இருந்தது என்பதே உணரப்படுகிறது. பாச நீக்கத்திற்குரிய முயற்சிகள் ஒவ்வொன்றாகச் செய்தலென்பது இயலாது. முற்றாகப் பாசத்தை நீக்க முழுமுயற்சி செய்தலே சீரிய தவ வாழ்க்கை என்பதும் பெறப்படுகிறது.

அடுத்து, மிகவுயர்ந்த தத்துவங்களை - மிகத்தரமான இலக்கிய உத்தியில் பாடும் சேக்கிழார் இங்குமங்குமாக நாம் சிரித்து மகிழவும், பாடியுள்ளார். இயற்பகை நாயனார் வரலாற்றில் இயற்பகையாரின் மனைவியைக் கேட்கவந்த சிவபெருமான், தம் வேடம் மறைத்துத் தூர்த்த வேடம் கொண்டுவந்தார்.

"ஆய நுண்பொரு ளாகியும் வெளியே
அம்ப லத்துள்நின் றாடுவார் உம்பர் நாய கிக்கும் தறிய வோபிரியா
நங்கைதா னறியாமையோ அறியோம் தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமும் தோன்றவே தியராய்
மாய வண்ணமே கொண்டுதந் தொண்டர்
மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்."

(4)