பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



செல்வம் படைத்தோரிடமிருந்து செல்வத்தை - வழங்குமாறு உள்ளத்தைப் பண்படுத்தப் பாடுபடுகிறது அருள்நெறி. "பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” என்ற வள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கருத்தை இன்று வாழ்க்கையில் வைத்துப் பேசுவது, அருள் நெறிதான்். இங்ங்னம் இன்றையச் சமுதாயத்திற்கு அருள்நெறி, பாவத்திற்கும், வறுமைக்கும் தொடர்பு இல்லை என்பதையும், புண்ணியத்திற்குப் பெரும் செல்வத்திற்கும் தொடர்பில்லை என்பதையும் பறைசாற்றியதாகும். உழைத்தால் செல்வம் தான்ேவரும். சோம்பேறியாக இருந்தால் செல்வம் சேராது. சீரழிந்து போவான் என்று அருள்நெறி இன்றைய சமுதாயத்திற்குப் பொருளாதாரத்தின் உண்மைத் தத்து வத்தைக் கூறிப் பரவச் செய்கிறது.