பக்கம்:குப்பைமேடு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

ராசீ

யைத் தூய்மை உடையதாக வைத்துக் கொண்டிருந்தது. கட்டிய கணவனைப்பற்றி எட்டிக்காயான நினைவுகள் அவளிடம் நிலைத்து நின்றன.

அவள் தந்தை ஆறுமுகம் என் அடுத்த வீட்டுக் குடி வாசி; நான் அந்தத் தெருவில் ஆதிவாசி; என்னிடம் பலபேர் வருவது எனது ராசி; அதனால் என்னை ராசி' என்றும் கூறி வந்தனர்.

அச்சுத் தொழிலை நம்பித்தான் அவர் அரிச்சுவடி தொடங்கியது. ஒரு சிலர் தம் சொந்த வாழ்க்கை அனுப வங்களை வைத்து நாவல்கள் எழுதிவிட்டுப் பின் புதுமை படைக்க முடியாத பதுமைகள் ஆகிவிடுவது உண்டு. அவர்கள் பத்திரிகை ஆசிரியர்களாக மாறிவிடுகின்றனர். பிறர் எழுத்தை அச்சிட்டு ஆசிரியர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

அதே போலத்தான் இவரும். பிறர் எழுதிய நூல்களை அச்சிட்டு வெளியீட்டாளர் என்று தொழில் ஆரம்பித்த வர். அந்த ஆசிரியர்கள் தம் எழுத்தின் ஊதியம் தன்னை விட்டுப் போகக் கூடாது என்று அவர்களே அச்சிடத் தொடங்கி விட்டனர். அதனால் நூல் வெளியிட்டுத் தொழிலை அடக்கிக் கொண்டார்; அச்சுத் தொழி லோடு அவர் இச்சைகளை அடக்கிக் கொள்ள வேண்டியது

ஆயிற்று.

அச்சு இயந்திரம் அசைவு குன்றிவிட்ட நாட்களில் மர்ம நாவல்களை வெளியிடுவது என்று தொடங்கினார். காம சூத்திரத்தின் அகராதியைக் கரைத்துக் குடித்த கதை யாசிரியர் சிலர் இவருக்குக் காசுக்கு எழுதிக் கொடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/104&oldid=1115425" இலிருந்து மீள்விக்கப்பட்டது