பக்கம்:குப்பைமேடு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

ராசீ

அவர் தன் கையில் பதிவு அஞ்சல் பிரித்து வைத்துக் கொண்டு என்னை நோக்கிச் சிரித்துக் கொண்டே வந்தார்.

“என்ன சார் விசேஷம்”

'ரிஜிஸ்தர் நோட்டீஸ்' என்றார்.

வக்கீல்கள் கொடுப்பார்கள்; வாங்கின கடனைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டு இருப்பார்கள்' என்றேன்.

"என் மகளுக்கு வந்த அறிவிப்பு; அநாகரிகமான

நோட்டீசு'

என்ன சார் இது புதுமையாக இருக்கிறது"

கணவர் மனைவியை அழைக்கிறார். அதற்கு வக்கீல் என்ன வக்காலத்து வேண்டி இருக்கிறது. குடும்ப விவகா ரங்களில் இவர்கள் தலையிடுவது அநாகரிகம்' என்று விளக் கம் தந்தார்.

வருகிறாயா? அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமா? என்று மிரட்டுகிறார்.

கலகலப்புக் கெட்டு விட்டது'

'அவள் இங்கு வந்து ஐந்து மாசம் தானே ஆயிற்று; அவசரம் எதற்கு?’’

காரணம் தெரியவில்லை; காரியங்கள் மட்டும் நடக் கின்றன' என்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/106&oldid=1115427" இலிருந்து மீள்விக்கப்பட்டது