பக்கம்:குப்பைமேடு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அவர்கள் வீட்டில் என்ன நடந்ததோ! கொடுமை தாங்க முடியாமல் இருந்திருக்கும், "அப்படி நடந்ததாக எதுவும் சொல்லவில்லை' அந்த நோட்டீசைப் பிரித்துப் பார்த்தேன். 'தாம்பத் திய உறவு தேவை; அதற்கு உடனே வந்து சேரவேண்டும்; இல்லாவிட்டால் கோர்ட்டு மூலம் வற்புறுத்த முடியும். அதற்காகும் செலவுகளையும் கட்டித்தீரவேண்டும்' என்று நோட்டீசு தந்திருந்தார்கள். 'ஏன் போக மறுக்கிறாள்?' 'முடியாது என்கிறாள்; இங்கேயே இருந்து வேலைக் குப்போகப் போவதாக உறுதியோடு இருக்கிறாள்.' 'குழந்தை' 'பாரம் இல்லை' என்கிறாள். மாமியார் வீட்டில் அவளைச் சாமியாட வைக்கி றார்களா? 'ஆரம்பத்தில் இருந்தது; இப்பொழுது இல்லை' 'பின் மறுப்பதற்குக் காரணம்?' 'அவள் கூற மறுக்கிறாள்.' ' என்னதான் காரணம்' 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/107&oldid=806142" இலிருந்து மீள்விக்கப்பட்டது