பக்கம்:குப்பைமேடு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

ராசீ

'அவர்கள் பணக்காரர்கள். நாம் அது ஒன்று அதிகம் படைக்காதவர்கள்' என்கிறாள்.

'இதுகூடவா ஒரு காரணம்? அங்கே எல்லா வசதி களும் இருக்கும்; எந்தக் குறையும் இருக்காது; சந்தோஷ மாக இருக்கலாமே!'

'சந்தோஷத்துக்குக் குறைவில்லை; குளிர் சாதன அறைதான். கால் தரையில் படாது. தேவர்களாக இருக் கலாம். கார்கள் கூட ஏ.சி. தான்; நாடகங்கள் ஒ. சி. தான் அவர் மாமியார் அடிக்கடி செல்வது காசிதான்; பூப்போல வைத்திருக்கிறார்கள். புருஷன் அவளைத் தெய்வமாக மதித்து வழிபடுகிறான். இவள் இல்லாமல் ஒரு இரவுகூட அவனால் இருக்க முடியாது. பானு' பானு' என்று வீட்டில் எதிர் ஒலி இசைத்துக் கொண்டே இருக்கும்.

மாமனார் வட்டிக்குப் பணம்கொடுத்து வகையாகப் பல லட்சங்களைச் சேர்ந்தவர். ஒரே மகன்’’.

"அவனுக்கு உத்தியோகம் இல்லையா?”

"அந்த யோகம் அவனுக்கு இல்லை; பெண்கள் எல்லாம் உத்தியோகத்துக்குப் போகத் தொடங்கிய பிறகு அதற்கு மதிப்பு இல்லை என்கிறான், உத்தியோகம் பெண் களில் லட்சணம் ஆகிவிட்டது. இனி, தான் போவது இல்லை என்று தத்துவம் பேசுகிறான்'

'படித்திருக்கிறானா?'

பி. காம் படித்தான், தேறவில்லை. அதற்குப் பிறகு பட்டம் வாங்காமலே ரொம்பவும் காம்' ஆகிவிட் . i ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/108&oldid=1115437" இலிருந்து மீள்விக்கப்பட்டது