பக்கம்:குப்பைமேடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குப்பைமேடு


-1-



ண்ணா நகர்க் குறுக்குத் தெரு; அடையாளம் சொல்லித்தான் தீரவேண்டும் என்பது இல்லை. சொன்னால் மட்டும் உங்களால் வரமுடியுமா? நீங்கள் ஏன் அங்கு வரப் போகிறீர்கள்? அய்யப்பன் கோயில் தெரியுமா? அய்யா சரணம்! அய்யப்பா சரணம்!

இந்த அண்ணா நகர்க் குறுக்குத் தெரு இருக்கிறதே அது சினிமாப் புகழ் பெற்ற இடம்; அதனால் இந்தத் தெருவில் வீடு கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை; “இங்கேதான் ‘ராதா’ தங்கியது என்பான் ஒரு புரோக்கர்”. அவள் அக்கா ‘அம்பிகா’ இங்கே தான் புடவையைக் காயப் போட்டது. என்று ஒரு தோட்டத்தைக் காட்டுவான்.

சில வீடுகள் பிசாசு புகுந்த வீடு என்று கதை கட்டி விடுவார்கள். இதுவும் புரோக்கர்கள் செய்யும் தந்திரம் யாரும் அங்குக் குடி வர மாட்டார்கள். பாதிவிலைக்கு விற்றுவிட்டுப் போய் விடுவார்கள் அந்தப் பிசாசுகளை ஒட்டத் தெரியாமல்.

சினிமாக்காரர் புகுந்த வீடு அதனால் அவற்றிற்குக் கிராக்கி ஏற்பட்டு விடுகிறது. இந்தப் படப்பிடிப்பு எங்கே

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/11&oldid=1112409" இலிருந்து மீள்விக்கப்பட்டது