பக்கம்:குப்பைமேடு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

ராசீ

-2

ஒட்ட வைக்க முடியுமா? என்று என்னைத் தட் டி எழுப்பினார். பேசிப்பார்த்தால் என்ன? நேசம வளர வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கைஎனக்குள் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக தி.நகர் இராமனுசசுடம் தெரு வுக்கு விசயம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. அங்கே விசுவ இந்து பரிசுத்து இருக்கிறது என்று கேள்வி, அது தடை செய்யப்பட்டு 'சீல்' வைத்துவிட்டார்கள் என்று சொல் கிறார்கள்.

ரங்கநாதன் தெருவுக்குப் போக வேண்டி இருந்தது. அங்கு என் உறவினர் மருமகள் துக்குப்போட்டுக்கொண்டு துயரச் சூழலை உருவாக்கி விட்டாள். அந்தப் பையன் எனக்கு வேண்டியவன்; நான் பார்த்துப் பேசி முடிவு செய்த இடம்தான். போலீசு வந்தார்கள். அந்த வீட்டில் அவள் உயிர்த் துணையாக இருந்த அவள் கணவனைக் காவல் துணையோடு கைது செய்து அவளைப் பிரித்து வைத்தார்கள். அவளுக்காக அவன் கண்ணிர் விடுவதைத்

தடுத்து வைத்தனர்

அவன் துடித்தான்; அவளைப் பற்றிய உரைகளைப் படித்தான், தன் அன்பு வாழ்க்கையைத் துன்பக் கண்ணிர் கொண்டு எழுதிக் காட்டினான். தான் குற்றவாளி அல்ல என்று சொல்லிப் பார்த்தான்; சட்டத்தின் செவியில் அவன் விட்ட அழுகை ஒலி புக மறுத்துவிட்டது.

'வரதட்சணைக் கொடுமை' என்ற சட்டத்தின் கீழ் அவனைக் கைது செய்து கொண்டார்களாம். விஷயம் வேறு அவன் வாய்விட்டுக்கூற மறுத்தான். செத்தவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/110&oldid=1115439" இலிருந்து மீள்விக்கப்பட்டது