பக்கம்:குப்பைமேடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

111

கண்ணில் பட்டது. மேதை இராமானுசம் கணக்குப் புலி: அவர் பெயரைத் தாங்கி இருந்தது. அதைவிட வைணவப் பெரியார் இராமானுசரின் பெயரால் அந்தத் தெரு வழங் கப்பட்டது என்பது மிகவும் பொருத்தமாகப்பட்டது. அந்தத் தெருவில் ஒரு பஜனை மடம்இருந்தது; அதற்கு இரா மானுச கூடம் என்று பெயர் வழங்கியது. எனவே இவர் மேதை அல்ல என்பது புரிந்தது.

அங்கு தான் உதயபானுவின் மாமனார் வீடு இருக் கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்களைப் பார்த்துப் பேசலாம் என்று சிறிய ஆவல் என்னைக் கூவி அழைத்தது. வீடா அது?' காவல் மிக்க சிறை போல இருந்தது. வெளியே கூர்க்கா கத்தியை மறைத்துவைத்து நந்தி போல் நின்றான்.

உள்ளே என்னப்பா' என்றேன்.

பட்டாக்கத்தி' என்றான்.

‘'எதுக்கு?'

1 யாராவது வந்தால் வெட்டித் தள்ள' என்றான்.

'உதயபானுவின் உறவினர்; ஊரிலிருந்து உதயமாகி

இருக்கிறார் என்று உரைக்க இயலுமா?' என்று எனக்கே உரிய மோனைத் தமிழில் மொழிந்து வைத்தேன்.

'அச்சா' என்று சொல்லி அந்த பச்சா' உள்ளே சென்றான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/113&oldid=1115442" இலிருந்து மீள்விக்கப்பட்டது