பக்கம்:குப்பைமேடு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

ராசீ

'நீங்கள் உள்ளே போகலாம்" என்றான். அவன் கை

யில் ஒரு அந்நிய நாட்டு நாய் இருந்தது.

"நாய் எதற்கு?'

'உம்மைக் கடிக்காது'

அது குழைந்து கொண்டே வந்தது.

"மோப்பம் பிடிக்க' என்றான்.

"மோப்பக் குழையும் விருத்து' என்ற குறள் நினை வுக்கு வந்தது.

நாய் கடிக்காதா?"

'பாலபாடம் படித்ததில்லையா'

'நாய் குரைக்கும்" என்றான்.

'அதற்காகவா நாய் வளர்க்கிறார்கள்'

"அதுபோதும்; அதன்குரல்கேட்டே ஓடிவிடுவார்கள்'

'பின் ஏன் அதை இழுத்து வந்தாய்?'

'அது எசமானுக்குச் செய்யும் துரோகம். சோறு போடுவது அவர்கள்; சுற்றி வருவது என்னோடு; அதன் சுபாவம் இது; நன்றி கெட்ட நாய்' என்றான்.

'நாய் பயம் என்னைவிட்டு நீங்கியது. அந்த வீட்டுக்கு உரியவர் தேவைக்குமேல் அதிகாரம் செய்ப வர் அல்ல என்பதை அறிந்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/114&oldid=1115443" இலிருந்து மீள்விக்கப்பட்டது