பக்கம்:குப்பைமேடு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

113

"இங்கே ஏன் வந்து மாட்டிக்கொண்டேன் என்று அந்த கூர்க்கா நினைப்பவன் போல் காணப்பட்டான்.

'உள்ளே போகலாமா?" என்றேன்.

'அதிகம் பேசக் கூடாது" என்றான்.

'பேசத் தானே போகிறேன்' என்றேன் .

'அவர்களைப் பேச விடு; நீ எதுவும் பேசாதே; அது தான் நல்லது' என்றான்.

அவன் அறிவாளி; அனுபவசாலி எனவும் பட்டது; திறமைசாலி எனவும் தெரிந்தது.

அவன் சொல்லாமல் இருந்தால் கொட்டிக் குமுறி இருப்பேன். அதனால் எந்தப் பயனும் விளைந்திருக்க முடியாது. அறிவிக்க நான் செல்லக்கூடாது; அறிந்துவரப் போவதுதான் அறிவுடைமை என்பதை அவன் அறிவித் தான.

அவனுக்கு நான் டிப்ஸ் எதுவும் தரவில்லை என்றா லும் அவன் எனக்குத் தந்த 'டிப்ஸ் அது. அவனுக்குப்பானு மேல் இருந்த மரியாதை அவன் எனக்கு உதவி செய்தற் குக்காரணம்.

-3

உள்ளே போனால் அவர்கள் வரவேற்பார்களா என்ற பயம் இருந்தது; நான் என்ன வி.ஐ.பியா அவர்கள் வர வேற்புக்குக் காத்து இருக்க. என் நண்பர் அச்சகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/115&oldid=1115444" இலிருந்து மீள்விக்கப்பட்டது