பக்கம்:குப்பைமேடு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

115

டாத பேச்சு; எரிச்சல் ஊட்டும் தமிழ், வைரக்கடுக்கன்' காதுக்கு ஒளி தந்தது. காயமே இது பொய்யடா காசு தான் மெய்யடா’ என்ற தத்துவம் அவர் காட்சியில் தெரியவந்தது.

பணத்தைத்தவிர வேறு எதுவும் பேசியறியாத பாட்டு; பக்தி என்பது குங்குமம், விபூதி என்ற அளவோடு நிறுத் திக் கொண்டவர்; அதற்கு மேல் சாத்திரம் பற்றிய சரித்தி ரம் எதும் அறியாதவர்; நான் ஏதோ பட விநியோகத் தர் என்று நினைத்து அவர் பல்லிளித்தார். என்று தெரிந்தது. வட்டிக்குக் கடன் வாங்க அவர் வாசலில் காத்து நிற்பவர்களில் ஒருவன் என்று என்னைக் கவனித் துக் கொண்டார்.

"எப்படி மார்க்கட்டு' என்று ஆரம்பித்தார்.

'மூர் மார்க்கட்டு, அதை இடித்துத் தள்ளி விட்டார் கள். இடம் பெறுவதற்கு யார் யாரோ முயற்சி செய் கிறார்கள்" என்றேன்.

'அது அல்ல' என்றார்.

'பங்கு மார்க்கட்டா. அதுதான் தில்லு முல்லாகப் போய்விட்டதே' என்று ஏதோ தெரிந்தவன் போல்

உளறிக் கொட்டினேன்.

'பட மார்க்கட்டு' என்று திருத்தினார். ஒ! இது திரை உலகச் சிந்தனை என்பதை அறிந்தேன்.

எப்பொழுதோ வெள்ளிமணி என்று வரும் வார இதழைப் புரட்டுவேன்; அதில் நட்சத்திரங்களின் படம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/117&oldid=1115448" இலிருந்து மீள்விக்கப்பட்டது