பக்கம்:குப்பைமேடு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

117

அவர் முகம் சுண்டைக்காய் ஆகிவிட்டது. தவறான

கடிதம் என்று என்னைக் கசந்து பார்த்தார்; அதற்குப்

பிறகு அவர் பேச்சு வெண்டைக்காய் ஆகியது.

'அவர் அனுப்பவில்லை' என்றேன்.

அவர் முகம் பரங்கிக் காயாகச் சிறிது ஒளி ஏற்பட்

டது.

'இந்தப்பக்கம் வந்தேன். இராமானுச கூடம் என்று பேர் பார்த்தேன்; நம்ம நண்பர் ஆறுமுகத்தின் சம்பந்தி வீடு இங்கு இருக்கிறது என்று அவர் சொல்லி இருந்தார், இவ்வளவு தூரம் வந்து விட்டு வீடு திரும்பினால் அவர் நம்ம சம்பந்தி வீட்டுக்குப் போனீரா என்று கேட்பார். கேட்டால் என்ன சொல்வது அதனால்தான் வந்தேன்' என்றேன்.

அவருக்குக் கூர்க்கா மீது கோபம்; அதுக்குத்தான் வட நாட்டுக்காரனை வைத்திருக்கக் கூடாது என்று முடிவுக்கு வந்தார்

அவர் பேச்சை எடுக்காதீர்' என்று சட்டப்பேரவைத் தலைவரின் ஆணை போல அவர் தடைவிதித்தார்.

எனக்குக் கோபம் வந்தது. "மடத்தனமாக இருக் கிறதே' என்று கேட்டுவிடலாம் போல இருந்தது.

அசம்பாவிதமாக ஏதும் நடக்கக் கூடாதே என்பதால் அடக்கம் மேற் கொண்டேன்.

'இது உங்களுக்கு மிருகத்தனமாகப் படவில்லையா?" என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/119&oldid=1115452" இலிருந்து மீள்விக்கப்பட்டது