பக்கம்:குப்பைமேடு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

119

கிறது. அவள் தர்வணி போட்டு மறைத்திருந்தாள். வரும் போதே ஒரு திருவிழா வீடு தேடி வருவதுபோல இருந்தது. அவள் மயிர்முடி சிவந்திருந்தது. கருப்பு நிறம் சிவந்து காணப்பட்டது. கையில் நிறத் துகள் வைத்திருந்தாள். முன் பின் பாராமல் அவள் என் சட் டையைச் சிவப்பாக்கினாள்.

"என்ன?’ என்று கேட்டேன்.

ஹோலி' என்றாள்.

'இங்கு வந்தது ஒரு ஜோலி" என்றேன்.

'இது ஒரு கேலி' என்றாள்.

'வாட் இஸ் யுவர் ஏஜ்? என்றேன்.

'வயது பதினாறு' என்றாள்.

சின்னக் குழந்தையாக இருந்தால் நேம் கேட்கலாம்.

_ 'ஏதாவது கேட்பது ஒரு சடங்கு என்று வயதைக்

கேட்டு வைத்தேன்; மயிலு’ நினைவுச்கு வந்தாள்.

'கூந்தல் கருப்பு; அது இப்பொழுது சிவப்பு' என்று என் வாய் முணுமுணுத்தது.

'இந்தப் பெண் என் மருமகள் இருக்கும் போது அடிக்கடி வருவாள்; இருவரும் தோஸ்துகள்' என்றார் பெரியவர்.

அந்தப் பெண்ணின் இந்தியின் தாக்கம் அவர் சொல் ஆக்கத்தில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/121&oldid=1115456" இலிருந்து மீள்விக்கப்பட்டது