பக்கம்:குப்பைமேடு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

121

போது மாறி விட்டது. எனக்கு ஒரு கெட்ட பழக்கம். கேட்டால் மறுக்காமல் கொண்டுவரச் சொல்லிவிடுவேன்.

'குலோப்ஜான்' என்று ஒரு கிண்ணத்தில் இரண்டு இனிப்பு மிதவைகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்.

'இந்த மிதவை யாதோ' என்றேன்.

என் சமையற்காரி ஒரு விதவை; அவள் செய்து தந் தது என்றார்".

'என் தமிழ்ப் பற்று அவர் பதிலில் எதிர் ஒலித்தது என்று கண்டு கொண்டேன்.

'மணக்கிறது" என்றேன்.

'யார் செய்தாலும் அது மணக்கத்தான் செய்யும்' என்றார்.

"இதுக்கு யார் சார் வெள்ளைக் காரன் பெயர் வைத் தார்கள்' என்று கேட்டேன்.

'குலாபி ஜாம்' என்பது குலோப் ஜான் ஆகிவிட்டது. என்று விளக்கம் தந்தார்.

'ஏன் சார், எப்படி சார் அவங்க வீட்டிலே பெண் எடுத்தீர்கள்' என்று அவருக்குச் சாதகமாகக் கேட்டேன் அவர் கட்சியில் இருந்து பேச்சைத் தொடுத்தேன்.

'முட்டாள்தனம்; ஏமாந்துவிட்டேன்' என்றார்.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/123&oldid=1115459" இலிருந்து மீள்விக்கப்பட்டது