பக்கம்:குப்பைமேடு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

ராசீ

'அவங்க ஒன்றும் கொடுத் திருக்க மாட் டாங்களே' என்று துரபம் போட்டேன்.

'பிச்சைக்காரப் பையல், அவன் கிட்டே என்ன இருக் குது கொடுக்க' என்றார்.

"அதுதான் பார்த்தேன் எதைப்பார்த்துச் செய்துகிட் டிர்கள்' என்றேன்.

'அது ஒரு கதை' என்றார்.

'அவன் அவன் கதை இல்லே'ன்னு கஷ்டப்படறான்; இவர் ஒரு கதையைப் பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பது கேட்டு வியப்பு அடைந்தேன்.

"சொல்ல முடியுமா?' என்றேன்.

நீங்கள் பட இயக்குநர் இல்லை; அதனால் தைரிய மாகச் சொல்கிறேன். அவர்கள் உடனே அதைக் காசு ஆக்கி விடுவார்கள்' என்றார்.

"நான் இந்தக் காதிலே வாங்கி அந்தக் காதிலே விட்டு விடுவேன் அது படிக்கிற காலத்திலே ஏற்பட்ட பழக்கம்' என்றேன். ○

'வெட்கக்கேடு' என்றார். கதையின் ஆர்வத்தைத் துண்டினார். ஒரு விளம்பரத்தை எடுத்துப் போட்டார். 'மூன்று வருஷத்துக்கு முற்பட்டது. படியுங்கள்' என்றார்.

"தாம்பரம் அடுத்து பல்லாவரத்துக்கு அருகில் காலி மனை; பத்து ஏக்கர் அதற்கு முன்பணம் போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/124&oldid=1115460" இலிருந்து மீள்விக்கப்பட்டது