பக்கம்:குப்பைமேடு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

ராசீ

'இப்பொழுது முடியாது' என்றார்.

'சல்லிக் காசு வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றேன். மல்லிகைப்பூ மட்டும் அவர்கள் செலவில் வாங்கிக் கொடுத்தார்கள்.

'கட்டிய புடவையோடு வரச் சொன்னிர்களா?"

மாற்றுப் புடவையோடு தான் லந்தாள்; அவ்வளவு முட்டாள்கள் அல்ல நாங்கள்?

'நீங்கள் ஏமாந்து விட்டீர்கள்?"

இந்த பத்து ஏக்கரா அவர் வைத்து விளையாடினார். நான் அவருக்குச் சொந்தம் என்று நினைத்து விட்டேன்'.

'அது என் நிலம்; அவரை விற்கச்சொல்லி இருந் தேன்" என்றேன்.

'அது தெரியாமல் அவசரப்பட்டு விட்டேன். மற் றொரு விளம்பரம் தந்திருந்தார்.

'லாட்டரியில் பத்து லட்சம் வந்தது என்று'

'விளம்பரம் அல்ல; நிருடர்களுக்குப் பேட் டி கொடுத் தார். அவர்கள் அவர் தந்த டிஃபனுக்குத் துரோகம் செய் யாமல் படம் எல்லாம் போட்டு ஜமாய்த்து விட்டார்கள்'.

"அது எனக்குத் தெரியாதே?'

"மற்றொரு வதந்தி. கடத்தல்காரர்கள் அவர் வீட்டில் வைரக்கற்களை விட்டுச் சென்று விட்டார்கள் என்று'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/126&oldid=1115569" இலிருந்து மீள்விக்கப்பட்டது