பக்கம்:குப்பைமேடு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

ராசீ

"அழகான பெண்களை வைத்துப் படம் எடுப்பது

தவறாகப் போய் விடுகிறது' என்று கூறினேன்.

'பெண் எங்களுக்குப் பிடித்துவிட்டது. பணக்காரப் பெண்ணாக இருந்தால் நாங்கள் தான் அவர்களுக்குப் பணி செய்ய வேண்டும். மருமகளிடம் பேசுவதாக இருந் தால்கூட நேரம் குறித்துவிட்டுத்தான் பேச வேண்டும். தன் கணவன் கூட ஒவ்வொரு சந்திப்டிலும் அவள் அனு மதி கேட்டுத்தான் பழக வேண்டும். காலம் அப்படியாகி விட்டது. அவளுக்கு மூட் வருகிறவரை சில அடி தூரம் எட்டித்தான் இருக்க வேண்டும். அந்தத் தொல்லைகள் எங்களுக்கு இல்லை. நிம்மதியான வாழ்க்கையைத்தான் தந்தாள்.

ஒன்றே ஒன்று அவனை அவள் தன் முந்தானையில் முடித்து வைத்திருப்பாள். அவனும் அவளைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கீழே இறக்கவே மாட்டான். அவளைப் பற்றி ஒரு சொல் சொல்லக் கூடாது' என் றார்.

'மாமியார் அவள் ஒரு சாமியாராகத்தான் இருந் தாள். மருமகள் கிழித்த கோட்டை அவள் தாண்ட மாட் டாள். அவள்தான் இந்த வீட்டு ராணி என்று மேலும் தொடர்ந்தார்.

'பின் ஏன் உங்களுக்குள் மன வருத்தம்?'

பையன்தான் அவசரப்பட்டுவிட்டான். இதுக்

குள்ளே என்னடா அவசரம் குழந்தை ஒரு வருஷம் ஆகட் டுர் என்று சொன்னேன்; என்னால் அவளை விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/128&oldid=1115571" இலிருந்து மீள்விக்கப்பட்டது