பக்கம்:குப்பைமேடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

127

பிரிந்து இருக்க முடியாது' என்றான். ஒரே தொல்லை; எத்தனையோ கடிதங்கள் எழுதிப் பார்த்தோம்; பய னில்லை. வக்கீலைக் கேட்டோம்; சட்டப்படி அவள் வாழக் கடமைப்பட்டவள். அதற்குச் சட்டம் இருக்கிறது. என்று படித்துக் காட்டினார். சரி பயப்படுவார்களே என்று வழக்குப் பண்ணச் சொன்னேன். அது அவர்கள் பிடிவாதத்தை இறுக்கி விட்டது' என்றார்.

அதற்கு மேல் அவரை வாட்ட விரும்பவில்லை. கேட்டு அறிய வேண்டியவற்றைத் தெரிந்து கொண்டேன். அவர் மகன் சண்முகம் அடுத்த விசாரணை.

அவனைக் கூண்டில் ஏற்றினேன். அதாவது விசார ணையில் நிறுத்தினேன்.

உங்கள் பெயர்?"

'சண்முகம்'

'உங்கள் அப்பாவின் பெயர்?"

"சரவண பெருமாள்' "உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?”

ஒரு பெண் இருக்கிறாள்' 'அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்ட தா?”

'ஐந்து மாதம் தான்; பிரசவத்துக்குச் சென்றவள் இன்னும் வரவில்லை'.

'இங்கே உங்கள் மனைவிக்கு ஏதாவது கொடுமை நிகழ்ந்ததா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/129&oldid=1115573" இலிருந்து மீள்விக்கப்பட்டது