பக்கம்:குப்பைமேடு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

ராசீ

'என் சுய உணர்வோடு எந்தத் தவறும் செய்ததாகத் தெரியவில்லை. என் தந்தையார் மட்டும் அவள் அப்பா வந்தால் முகம் கொடுத்துப் பேசமாட்டார்; அவர் ஹோட்டலில் தங்குவது போல இருந்துவிட்டுத் தன் மகளி டம் மட்டும் பேசிவிட்டுப் போவார். அவர்கள் ஊரில் இருந்து அஞ்சல் உறைகள் வந்தால் அவை படிக்கப்படா மல் பதுக்கி வைக்கப்படும். அந்தக் கடிதங்களை என் மனைவிக்குக் காட்டமாட்டார். அந்த வீட்டுத் துன்பக் கேணியில் தீட்டும் சோகச் சித்திரங்கள் என்று மு. க்கி வைப்பார். ஏழ்மை அந்த எழுத்துக்களில் எழிலகம் காட் டும்; மருமகள் முகம் வாடக்கூடாதே என்பதற்காக அவர் மறைத்து வைத்தார். இந்த இரண்டுதான் அவளுக்கு அதிர்ச்சி தந்தவை.

மற்றொன்று என்னைப் போய் ஏதாவது ஒரு உத்தி யோகம் செய்யச் சொல்கிறாள். அவளை விட்டு ஒரு

நாளும் என்னால் தனித்து இருக்க முடியாது.

எங்கப்பா சொத்துக்கள் ஏராளமாகச் சேர்த்து வைச் சிருக்கார். அவருக்குப் பின்னாலே நான்தான் வாரிசு, கொஞ்ச நாள் பொறுமையாக இருக்கக்கூடாதா இந்தக் கிழவர் இன்னும் எத்தனை நாளைக்கு இரும்புப் பெட்டிச் சாவியைக் கையில் வைத்திருக்கப்போகிறார்? அறுபதைத் தாண்டியாச்சு, இனிமேல் அடுக்கடுக்கா நோய் வராமல் இருக்கப் போவது இல்லை. குலோப் ஜான்' நிறைய சாப்பிடுகிறார், நிச்சயம் சர்க்கரை வியாதி வரத்தான் போகுது; பணம் கொடுக்கல் வாங்கல் அதிகம்; டென்சன் ந்ாளுக்கு நாள் அதிகமாகி வருது. பி. பி. வரத்தான் போவுது. இப்படி ஒன்று ஒன்றாக வந்தால் டாக்டர் வீட்டுக்கு நடந்தால் அவர்கள் சுரண்டி விடுவார்கள். மெடிகல் செக்கப் அதுக்கு அனுப்பினால் எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/130&oldid=1115575" இலிருந்து மீள்விக்கப்பட்டது