பக்கம்:குப்பைமேடு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

ராசீ

அவளுக்கு என்று ஒரு ஆன்மா இருக்கிறது; அவள் யாருடைய உடைமையும் அல்ல; தாய் வீட்டுக்கும் அவளை அர்ப்பணிக்க முடியாது; புகுந்த வீட்டிலும் அவள் அடிமையாகக் கருத முடியாது, அவள் தன்மானத் தைத்தொட்டு இருக்கிறீர்கள், அது என்ன? அதுதான் விளங்கவில்லை, என்று விளக்கினேன்.

'குழந்தைதான் எங்களைப் பிரித்துவிட்டது! அவள் பிரசவத்துக்குப் போனாள்; அங்கே அவள் மனம் மாறி விட்டது. தாய்க்குத் தன் குழந்தை மீது பாசம் ஏற்படுவது இயற்கைதான். என்றாலும் அதுவே அவள் லட்சியம் என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற வினாவினை எழுப்பினான்.

'அந்தக் குழந்தைக்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டு இருக்கும், அதை உங்களிடம் மறைத்து இருக்கலாம்? என்று ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தினேன். எப்படியா வது அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பது என் உந்துதலாக இருந்தது.

மாப்பிள்ளை சராசரி மனிதர்; பொதுவாகப் பணம் வார்த்துவிட்ட வார்ப்படம் என்று தெரிந்தது, பணம் இருக்கிறது என்றாலும் அவனுக்கு என்ற தனித்தன்மை இல்லை; அப்பாவை எதிர்த்து அவளோடு தனித் குடித் தனம் செய்யும் துணிவு இல்லை. அவன் உழைப்பில் அவள் வாழ நினைக்கிறாள், அது சாத்தியப்படுமா? அந்த வீட்டில் யாருமே உழைப்பாளிகளைக் காணமுடிய வில்லை; பணம் தான் உழைப்பாளி; அதுதான் அங்கே ஆதிக்கம் செய்கிறது. இச்சூழ்நிலையில் அவனையும் பணம் ஒரு பொம்மையாக ஆட்டுகிறது. அது அவளுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/134&oldid=1115580" இலிருந்து மீள்விக்கப்பட்டது