பக்கம்:குப்பைமேடு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

137

தகராறு' என்று நினைத்தேன். இதுதான் வழக்கமான நிகழ்ச்சி.

"பையன் ஒரே தொந்தரவு, டி.வி.யில் அவனுக்கு பிடித்த காட்சி வரவில்லை அதனால் ஒரே கூச்சல்' என்றார்;

"பையன் கொஞ்சம் வளர்ச்சி குன்றியவன்' என்றார்.

தேவையில்லாத செய்தி; அதை அவர் சொல்ல வேண் யது இல்லை. -

தூசுபட்ட சட்டையைத் துடைத்துக் கொள்வது போல் அந்த அறிமுகம் இருந்தது. வினாவில் வர முடிய வில்லை என்பதைத் தன் குடும்பப் பின்னணி கூறி விளக் கினார் என்று தெரிந்தது.

'இந்துச் சட்டப்படி உங்கள் மருமகளை வந்து வாழ வைக்க முடியும்' என்று சட்டப் பின்னணியில் இருந்து பேசினார்.

'இங்கே வந்து அவள் முரண்பாடு கொண்டால்?'

'அது உங்கள் கையில் இருக்கிறது; நீங்கள் நல்ல விதமாக நடத்த வேண்டும்' என்றார்.

"நான் சில கேள்விகள் கேட்கிறேன். பதில் எனக்குத் தேவை” என்றார். உங்கள் பையனை அவர்களுக்குப் பிடிக் கவில்லையா?”

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/139&oldid=1115586" இலிருந்து மீள்விக்கப்பட்டது