பக்கம்:குப்பைமேடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ராசீ

மாப்பிள்ளை யார்? இன்னும் வரவில்லை என்றால் அவன் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாள்? இப்படி எல்லாம் கேட்டுத் துளைக்க வேண்டும் என்ற ஆசை. இந்த ஆசை ஏன் வருகிறது என்று கேட்பீர்கள். அதுதான் எழுத்து; எழுத்தாளன் அவன் ‘துரு துரு’ என்று எதையாவது பார்க்கிறான், அதைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.

அவளைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆசைதான்! என்ன செய்வது? அவள் ஏதாவது நிகழ்ச்சிகளுக்குக் காரணம் ஆவாளா? கிடக்கட்டும். அவளைப் பார்க்க முடிந்தது; நினைத்து நினைத்துப் பார்ப்பேன், அவ்வளவு தான.

என் கண்ணுக்குத் தெரிந்தது எதிர் வீட்டுக் ‘குப்பைத் தொட்டி’. பெண்ணைப் பார்த்த கண்தான் இதையும் பார்க்கிறது. அது ஒரு புதுமையா? இதில் என்ன இருக்கிறது? அதில் ஒன்றும் இல்லைதான். அதைக் கதாபாத்திரமாக்கிய பெருமை அந்த வீட்டுக்குரியவரைத்தான் சாரும். அவர்தான் என் எழுத்தில் அறிமுகமாகும் இரண்டாவது மனிதப் பாத்திரம். இந்தச் சராசரி மனிதரை வைத்து என்ன எழுதமுடியும்? அவரைப் பார்க்கும்போது எனக்குச் சாத்தான்தான் நினைவுக்கு வருகிறது. சாத்தான் என்றால் கெட்டவர் என்று விவிலிய நூல் சொல்வதாகக் கேட்டிருக்கிறேன். அதுக்கும் இவர் லாயக்கு இல்லை. கெட்டவராக இருந்தால் கதைக்குக் கரு கிடைக்கும். கெட்டவர்களைக் கொண்டுதானே எல்லாரும் கதை எழுதுகிறார்கள். அந்த வகையில் பயன்படத்தக்க தீமை, பிறரை ஏமாற்றும் வல்லமை எதுவும் இல்லை. நல்லதும் இல்லை; கெட்டதும் இல்லை. இவர்களால் யாருக்கும் பயனில்லை. தான் உண்டு தன் வீடு உண்டு, தன் ஜீவிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/14&oldid=1112425" இலிருந்து மீள்விக்கப்பட்டது