பக்கம்:குப்பைமேடு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j$8 ff fr g 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை'. 'மாமியார் கொடுமை?' 'அவளை என் மகள் போல் நடத்தினேன்; என்னை யும் அவள் தாய்போல் நேசித்தாள்'. 'வரதட்சணை வற்புறுத்தல்?' "அவர்கள் ஏதாவது தருவதாகச் சொல்லிச் ஏமாற்றி விட்டார்களா?' 'அப்படியும் இல்லை'. 'பின் உங்கள் மீது வருத்தம்?" 'அவள் அப்பா வரும்போது அவருக்குத் தக்க மரி யாதை தரவில்லை என்பது இருக்கலாம். அவளுக்கு வரும் கடிதங்களை அவளிடம் கொடுப்பதில்லை'. காரணம்?' 'அதிலே அவர்கள் வீட்டுக் கஷ்டம் எல்லாம் எழுதி இருப்பார்கள்". "அப்படி என்ன கஷ்டம்? 'இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். ஒரு தம்பி பள்ளிக் கூடச் சம்பளம் கட்ட முடியாமல் கஷ்டப்படுவ தாக எழுதுவார்கள். சின்ன பையனை படிப்பு நிறுத்தி விடலாமா என்று கேட்டு எழுதுவார்கள்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/140&oldid=806179" இலிருந்து மீள்விக்கப்பட்டது